2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மைலங்குளத்தில் இளம்பெண் கழுத்து வெட்டி கொலை

Menaka Mookandi   / 2012 ஜூலை 13 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலங்குளம் எனும் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கத்தியால் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வண்ணாத்திவில்லு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை படுகெலை செய்யப்பட்ட யுவதி மைலங்குளம் 6ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள தனது வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அங்கு வந்துள்ள மர்ம மனிதர் அந்த யுவதியின் கழுத்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டி படுகொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இப்பெண்ணின் வீட்டிலிருந்த தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்யுவதி எதற்காகக் கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார் என்ற விபரங்களை அறிய பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .