2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பிக்கு கைது

Super User   / 2012 ஜூலை 13 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (சுபுன் டயஸ்)

குருநாகல் ஹிரிபிட்டிய- வெல்லாவ பிரதேசத்திலுள்ள பௌத்த ஆலயமொன்றின் தலைமை மதகுருவை, போலி நாணயத்தாள்களை அச்சிட்டமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குருநாகல் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் தேடுதல் உத்தரவை பெற்ற பின்னர் நடத்திய முற்றுகையின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேவ்வேறான அடையாளங்களுடன் அவர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறினர்.  போலியான மூன்று அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம், இரு கணினிகள், போலி நாணயத்தாள்கள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். போலி 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருளொன்றையும் தாம் கண்டறிந்ததாக அவர்கள் கூறினர்.


  Comments - 0

  • meenavan Friday, 13 July 2012 06:44 PM

    போலி ஆசாமி பௌத்த மடாலயத்தில்........?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X