2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கம்பஹா நகரில் பிரபல வர்த்தகரொருவர் வெட்டிக் கொலை

Kogilavani   / 2012 ஜூலை 14 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா நகரில் ஜவுளி கடையொன்றின் உரிமையாளரொருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 'கப்ருகா' ஜவுளி கடையின் உரிமையாளரான லரிக்சமன் ராஜபக்ஷ (வயது 44) என்பவரே இவ்வாறு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் உயிரழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி நபர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கடைக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் வாளினால் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு கம்பஹா சந்தைப் பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலிலிருந்து தப்பி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்றபோதும் சந்தேக நபர்கள் அவரை வாள்களினால் பலமுறை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளர்கள் குறித்த நபரின் முகத்தை குறிவைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலநிமிடங்களிலே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான இவர் யகிமா பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் விஜித டி கொமசாரு மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் சில்வாவின் மேற்பார்வையின் கீழ் கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் சரித்த ஏ.பி ஜயசுந்தர குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகரி பிரபாத் பரனவிதானவின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறார்.   (தீபா அதிகாரி, திலகரத்ன திஸநாயக்க)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X