2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இரு சிசுக்களை பற்றைக்குள் வீசிய தாயர்மார்கள் கைது

Kogilavani   / 2012 ஜூலை 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)
பிறந்து இறந்த ஒருநாளான இரு சிசுக்களை பற்றை ஒன்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸ் பொறுப்பதிகாரி எல்.பி.ரி பத்திரன தெரிவித்தார்.

எழுதுமட்டுவாள் மிருசுவில் பகுதியிலிருந்தும் மந்துவில் கிழக்கு பகுதியிலிருந்துமே இவ்விரு சிசுக்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சிசுக்களில் ஒன்று ஆண் மற்றையது பெண் என அவர் தெரிவித்தார்.

இந்த சிசுக்களை வீசிய தாய்மார் என சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் கைது செய்யப்படடுள்ளதுடன் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிசுக்கள் இரண்டும் மருத்துவப் பரிசோதணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X