2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆடை அளவுபார்க்கும் அறையில் பெண் படம்பிடிக்கப்பட்ட விவகாரத்தால் கடை உரிமையாளர் கொலை

Super User   / 2012 ஜூலை 21 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடை அளவை சோதிப்பதற்கான அறையினுள் கண்காணிப்பு கமெராவொன்றை பொருத்தி பெண்ணொருவர் படம்பிடிக்கப்பட்ட விவகாரமே கம்பஹா பிரதேசத்தில் கடை உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான லரிக் ராஜபக்ஷ (43) கொலை செய்யப்பட்டமைக்கு வழிவகுத்தது  என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேற்படி வர்த்தகர் கடந்த வெள்ளிக்கிழமை வாளால் வெட்டி கொல்லப்பட்டார். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரு வாள்களையும் பிரதான சந்தேக நபரின் பாதணியையும் பொலிஸார் கைப்பற்றினர். இதன் மூலம் இக்கொலையின் பின்னணியை பொலிஸார் கண்டறிய முடிந்தது.

பிரதான சந்தேக நபரின் சகோதரி, இக்கடையில் ஆடையொன்றை அணிந்து பார்ப்பதற்காக அதற்கான அறைக்குள் சென்றபோது கண்காணிப்பு கமெராவினால் படம்பிடிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பின்னர், கடையின் உரிமையாளர் இப்படத்தை காட்டி, மேற்படி பெண்ணை நிர்ப்பந்தித்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.  மற்றொரு நபரும் இக்குற்றத்தை புரிவதற்கு கடையின் உரிமையாளர் இடமளித்துள்ளார்.

திருமணமான மேற்படி பெண், இச்சம்பவத்தின்  பின்னர் மன அழுத்தத்திற்குள்ளாகி இருந்த நிலையில்  இது குறித்து அவரின் சகோதரர்களில் ஒருவர் வினவியுள்ளார். அப்போது, நடந்த விடயங்களை சகோதரரிடம் மேற்படி பெண் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து மேற்படி சகோதரர் மற்றொருவருடன் இணைந்து கடையின் உரிமையாளரை வெட்டிக் கொலை செய்துள்ளாதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பிரதான சந்தேக நபர் ஏற்கெனவே பல குற்றச்சசெயல்களை புரிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்ற நபரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

  Comments - 0

  • Kosegith Sunday, 22 July 2012 09:16 AM

    சட்டத்தை கையில் எடுப்பது நல்லதல்ல. ஆனால் பணத்திமிரில் எந்த பாதகத்தையும் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு தண்டனையளிப்பது எவ்வாறு?

    Reply : 0       0

    Srilankan Sunday, 22 July 2012 11:20 AM

    சட்டப்படி தவறு என்றாலும் ...... ஒரு சகோதரனாக சரி என்றே எண்ணத் தோன்றுகிறது......

    Reply : 0       0

    vaasahan Monday, 23 July 2012 09:39 AM

    சில வேளைகளில் உணர்ச்சி நியாயப்படுத்தப்பட நிர்ப்பந்திக்கப்படுகிறது. அப்படியான ஒரு தருணமே இது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .