2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பெற்றோரைக் கொலை செய்த மகன் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 23 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய், தந்தையரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகனை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று கட்டுவன, கொமடிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

விவாகப் பதிவாளர் பதவி வகிக்கும் 60 வயதான கரவிலகந்த ஜினதாச மற்றும் அவரது மனைவி அரம்பகே சோமாவதி (வயது 52) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

சம்பவத்தில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான மகன், எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவத்தின் போது, விவாகப் பதிவாளரின் சடலம் வீட்டுக்கு முன்னால் காணப்பட்ட மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி கடுமையான வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் வீட்டுக்குள் சடலமாக காணப்பட்ட நிலையிலும் மீட்டுக்கப்பட்டுள்ளனர்.

காணிப் பிரச்சினையொன்றின் காரணமாகவே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்று முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளன என்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுவன பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .