2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வென்னப்புவவில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 24 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கருதப்படும்  வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் வென்னப்புவ சிரிகம்பல பிரதேசத்திலுள்ள  வீடொன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை மீட்கப்படுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ சிரிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தயாரான ஏ.எம்.பண்டார மெனிக்கே (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்குச் சென்று இச்சடலத்தை மீட்டுள்ளதாகக் கூறிய பொலிஸார்,  இவர் உயிரிழந்து 2 நாட்களாகியிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வென்னப்புவ பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .