2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவில் புராதன விகாரை பகுதி ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்படும் இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை நேற்று புதன்கிழமை இரவு நவகத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

நவகத்தேகம வெலேவெவ எனும் இடத்தில் அமைந்துள்ள புராதன விகாரை ஒன்று அமைந்துள்ள இடத்திலேயே இவர்கள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இராணுவத்தினரும் ஆனமடு மற்றும் கேகாலை போன்ற பிரதேசங்களையும், ஏனைய இருவரும் ஆனமடு மற்றும் பொத்துவேஹர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள நவகத்தேகம பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .