2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா, புகையிலைத் தூள் கொண்டுசென்ற குற்றச்சாட்டில் அறுவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 27 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          (எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி, பத்தலங்குண்டு கடற்பரப்பில்  கஞ்சா மற்றும் புகையிலைத் தூள்களை கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் 2 இந்தியப் பிரஜைகள் உட்பட 6  பேர் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் மன்னாரைச் சேர்ந்த இருவரும் கொழும்பைச் சேர்ந்த இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்,  பத்தலங்குண்டு தீவுப்பகுதியிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த படகொன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். இதன்போது அப்படகிலிருந்து  29 கிலோ 600 கிராம் கஞ்சாவையும் 360 கிலோ புகையிலைத் தூள்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், அப்படகிலிருந்த 6 பேரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .