2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில்: கணவன் தலைமறைவு

Menaka Mookandi   / 2012 ஜூலை 30 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ்ப்பாணம், ஆணைக்கோட்டை முள்ளிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை கத்தி குத்துக்கு இலக்காகிய குடும்பப் பெண் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை அடுத்து சந்தேகநபரான கணவர் தலைமறைவாகியுள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் பாடசாலை ஒன்றில் சமையல் வேலைக்கு செல்பவர் என்றும் இன்று காலை வழமைபொல் வேலைக்கு செல்ல தயாராகும் போது கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறே சம்பவத்துக்கு காரணமாகியுள்ளது என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து தலைமறைவாகியுள்ள கணவரைத் தேடிக் கைது செயற்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள மொனிப்பாய் பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .