2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஊரெழுவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                      (எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணம், ஊரெழுவின் பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் கோடாரியினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்காடு இராமநாதபுரம் வட்டக்கச்சியைச் சேர்ந்த முருகேசு சிவராசா (வயது 45) என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

இது தொடர்பான முறைப்பாடு இன்று திங்கட்கிழமை அதிகாலை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கொலைக்கு பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும்  கோடாரி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வைத்தியதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வட்டக்கச்சியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொழில் செய்வதாகவும் நண்பனுடன் குறித்த நபர்  சம்பவம் நடைபெற்ற  இடத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  அவ்வாறே நேற்றையதினமும்  பொக்கணைப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில்  நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக குறித்த நபர் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இசை நிகழ்ச்சி முடிவடைந்து மக்கள்  திரும்பிக்கொண்டிருந்தபோது இவரது நண்பனின் உறவினர் வீட்டில்  தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் தீயை அணைத்துவிட்டு பார்த்தபோது குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட  யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி கணேசராசா, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை  யாழ். போதனா வைத்திசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .