2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹொரவப்பொத்தானையில் ஒருவர் சுட்டுக் கொலை

Super User   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

ஹொரவப்பொத்தானை, முக்குறவெள பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் சூட்டுக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹொரவப்பொத்தானையை சேர்ந்த மூன்று மாத கைக்குழந்தையின் தந்தையான 32 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா மிஹ்லார் என அடையளம் காணப்பட்டுள்ளது.

முக்கவெள குளத்திற்கு பக்கத்திலுள்ள 60 வயதான முஹம்மது எனும் முதியோருக்கும் இறந்தவருக்கும் இடையே சேனைப்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் காணிகளில் எற்பட்ட வாக்குவாதமே இக்கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் இறந்தவரின் மருமகனான ஒருவர் காயமடைந்த நிலையில் அநூராதபுர பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகத்ததை மேற்கொண்டவர்  தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .