2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கோப்பாயில் வயோதிபப் பெண் அடித்துக்கொலை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். கோப்பாய் பழம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவந்த வயோதிபப் பெண் ஒருவர் இனந்தெரியாதோரினால் நேற்று புதன்கிழமை இரவு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வைத்தியபால தெரிவித்தார்.

குமாரசாமி மங்கயற்கரசி (வயது 70) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

இவரின் 4 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்துவருகின்ற நிலையில்,  இவர் கொழும்பிலும்  யாழ்ப்பாணத்திலும்  மாறிமாறி வசித்துவந்துள்ளதாகவும்  உறவினர் ஒருவரின் திவசத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு இவர் வந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் உறவினர் ஒருவர்  கூறினார்.

இது தொடர்பில்  கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து  சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் தடயவியலாளர்கள் சடலத்தை பார்வையிட்டதுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும்  பொருட்கள் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட யாழ். மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதிபதி கணேசராசா, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .