2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்றில் இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் இருந்து அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில்  இளைஞர் ஒருவரின் சடலத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை அக்கரைப்பற்று பொலிஸார் மீட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று முதலாம் பிரிவில் பதூர் நகரைச் சேர்ந்த கணேசமூர்த்தி றியாஸ் (வயது 20) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சடலத்தை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். 

இதனை அடுத்து சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

வீட்டில் இருந்து வழமைபோன்று நேற்று வியாழக்கிழமை காலை தான் தொழில்செய்யும் கடை ஒன்றுக்குச் சென்ற இவர், இன்று வெள்ளிக்கிழமை காலைவரை வீடு திரும்பாது இருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பொலித்தினால் சுற்றிக் கொண்டுவந்து தென்னந்தோட்டத்தில் போடப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .