2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மொனராகலை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

மொனராகலையில் கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரைச் சந்திக்கச்சென்ற போது கடந்த 11ஆம் திகதி காணாமல் போன சமஸ்டீன் பறிஸ் மொகமட் (வயது 38) என்பவரின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி மரணமானவர், காணாமல் போனதற்கு அடுத்த நாள் அவரது மோட்டார் சைக்கிள், காற்சட்டை, தலைக்கவசம் என்பன மொனராகலை, ஜயசேனகம என்ற பிரதேசத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன.

இவரை இறுதியாகப் பார்த்த இருவர், முதலில் சாட்சிகளாக இனங்காணப்பட்டனர். ஆனால், இவர்கள் இருவருக்கும் காணாமல் போனவருக்கும் இடையில் நீண்ட காலமாக காசுப் பிரச்சினை இருந்து வந்துள்ளது என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் காணாமல் போனவரின் உடல், றட்டன்பிட்டிய காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலத்தின் உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டன. நீதவான் விசாரணையின் பின் சடலம் மொனராகலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சந்தேநபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .