2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபர் கைது

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தவாரம் வெள்ளவத்தை ராமகிருஸ்ண ட்ரெஸ்ட் வீடொன்றில் தாய், தந்தை, தங்கை ஆகிய மூவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த முக்கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என கருதப்பட்ட கொலையுண்ட தம்பதியினரின் மூத்த மகனான 28 வயதுடைய பிரபாத் குமாரசுவாமி என்பவரையே பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இக்கைது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன - தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்...

“நேற்றைய தினம் இச்சந்தேகநபர் தொடர்பில் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டோம். அதற்கமைய இன்று காலை 10.45 மணியளவில் கடவத்தை பகுதியில் பஸ்ஸில் பயணிக்கும்போதே மேற்படி  சந்தேக நபரை கைது செய்துள்ளோம். கொழும்பிலிருந்து குருணாகல் நோக்கி சென்ற பஸ்ஸிலேயே குறித்த சந்தேக நபர் பயணம் செய்துள்ளார். இவரை அடையாளம் கட்ட பயணி எமக்கு தகவல் வழங்கியதையடுத்து கடவத்தை பகுதியில் அவரை கைது செய்தோம்” என்று கூறினார்.

  Comments - 0

  • IBNU ABOO Friday, 24 August 2012 11:36 AM

    இதுதான்டா பொலிஷ்..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .