2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மட்டு. நகரில் துப்பாக்கி முனையில் கொள்ளை

Super User   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் நகரிலுள்ள வீடொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியின் 3ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றிலேயே இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்; தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜாவின் சகேதாரி புவனசுந்தனரி என்பவரின் வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்கு வந்த நபரொருவர் பிரதீப் மாஸ்ட்டரை சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்னர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுப்பதற்கு உள்ளே சென்ற போது துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி வீட்டிற்குள் இருந்த சுமார் 24 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .