2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் மகளும் பலி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரண, மொரகஹஹெனப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 32 வயதான தந்தை ஒருவரும் 4 வயதான மகள்  ஒருவரும் இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தாயார் காயமடைந்த நிலையில் ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த 3 பேரும் சைக்கிளில் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது இவர்கள் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .