2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வர்த்தகரை கடத்தி கப்பம் பெற்ற குற்றச்சாட்டுக்களான சந்தேக நபர்கள் நால்வருக்கு பிணை

Sanjeewa   / 2012 ஓகஸ்ட் 30 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (ரி.பாருக் தாஜுதீன்)

வர்த்தகர் ஒருவரின் சகோதரரைக் கடத்தி, அவரை விடுவிப்பதற்கு 2.1 மில்லியன் ரூபா கப்பம் பெற்றதாக குற்றம்சுமத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட நால்வரை பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் அனுமதித்துள்ளார்.

இச்சந்தேக நபர்கள் கொழும்பு டாம் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று 2.1 மில்லியன் ரூபாவை பெற்றதுடன் சகோதரர்கள் இருவரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பின்னர் சகோரர்களில் ஒருவரை விடுதலை செய்து, மற்றொரு சகோதரை விடுவிப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா பணம் கொண்டுவருமாறு அறிவுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட சகோதரர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உதவியுடன் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குச் சென்று பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதையடுத்து பணிப்பாளரின் உத்தரவின் பேரில்  சந்தே நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததுடன் பணயக் கைதியை விடுதலை செய்தனர்.

இவர்கள் கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இவர்கள் தொடர்பான விசாரணை முடிவடைந்ததால் இவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டுமென சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கோரினார்.

சந்தேக நபர்கள் நால்வரiயும்  தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 மில்லியன் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் அனுமதித்தார். சந்தே நபர்களின் கடவுச்சீட்டுகளை தடுத்து வைக்க உத்தரவிட்ட நீதவான், முறைப்பாட்டாளர்களையோ சாட்சிகளையோ இடையூறு செய்யக்கூடாது எனவும் சந்தேக நபர்களை எச்சரித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .