2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 2 பாடசாலை மாணவர்கள் உட்பட 3 பேரை ஹட்டன் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவர்கள் திருடியதாகக் கூறப்படும்  தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பகுதியளவில் அகற்றப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர்  சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, இவருக்கு உதவியதாகக் கூறப்படும் 2 பாடசாலை மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

வீட்டு பாவனைப் பொருட்கள், பணம், கடைகளில் இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை திருடிவந்ததுடன், வீதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் திருடி அவற்றின் பாகங்களை விற்பனை செய்துவந்துள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் ஹட்டன் பொலிஸார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .