2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழுபேர் கைது

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                      (எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போட்றி தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் ஏழுபேரை இன்று செவ்வாய்க்கிழமை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றினைத் தொடர்ந்து ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவவின் ஆலோசனைக்கேற்ப நோர்வூட் போட்றி தோட்டத்துக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு மாணிக்க கல் அகழ்வதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .