2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வெடிபொருட்கள் வைத்திருந்த இருவர் கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி, எஸ்.கே.பிரசாத்)

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா எரிக்பேரேரா தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 6ஆம் திகதி வியாழக்கிழமை பூநகரிப் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாக்ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் ரி.என்.ரி. ரக வெடிபொருக்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த சமயம் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்தவர்கள் என்று தற்போது இவர்கள் இருவரையும் தடுப்புக்காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை  கனகராயன்குளம்; பகுதியில் ரி 56 துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 90 ரவைகள், கிளைமோர் குண்டு இரண்டும் மாங்குளம் பகுதியில் 6 மோட்டார் ரவைகளும், மூன்று கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .