2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பள்ளம வில்பத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து வயோதிபர்களின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 22 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (எஸ்.எம்.மும்தாஜ்)
புத்தளம், பள்ளம வில்பத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து வயோதிபர்கள் இருவரின் சடலத்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

78 வயதுடைய வயோதிபரும் அவருடைய  மனைவியுமே (வயது 75)  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்த பொலிஸார்  மேற்படி வயோதிபர்களின் வீட்டின் அருகில்
வசித்து வந்த பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பள்ளம பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .