2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிகரெட் வழங்க மறுத்த கடை உரிமையாளர் கொலை; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியாவில் கடை உரிமையாளர் ஒருவர்  சிகரெட் வழங்க மறுத்தமையால் அவர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வவுனியாப் பொலிஸார், 17 வயதுடைய சிறுவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா, ஓயார் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா (வயது 70) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா, ஓயார் சின்னக்குளம் பகுதியில் உள்ள தங்கராசா என்பவரின் கடைக்கு மதுபோதையில் சென்ற அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு சிகரெட் தருமாறு வற்புறுத்தியுள்ளார். எனினும் கடை உரிமையாளர்,  21 வயதுக்கு குறைந்த எவருக்கும் தன்னால் சிகரெட் வழங்கமுடியாது என தெரிவித்துள்ளார். பின்னர் இவர் அந்தப் பகுதியில் உள்ள மதுபானசாலையில் மது அருந்திவிட்டு வந்து கடை உரிமையாளரை கல்லால் தாக்கியுள்ளதாகவும் இதன்போது கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலத்தை பார்வையிட்ட நீதிவான் பிரேத  பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்தார்.  சடலம் குருநாகல் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சிறுவன் வசித்து வந்த கொட்டகை வீட்டை அகற்றிய அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சிறுவனின் பெற்றோரையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .