2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நான்கு இந்து ஆலயங்களில் உள்ள கோபுரக் கலசங்கள் திருட்டு

Kogilavani   / 2013 மார்ச் 23 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.நவரட்ணரசா

ஏழாலை கட்டுவன் பகுதியில் உள்ள நான்கு இந்து ஆலயங்களில் கோபுரக் கலசங்கள் உட்பட சில பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

கடந்த புதன், வியாழன் ஆகிய நாட்களிலேயே இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆலய தர்மகர்தா சபையினர் தெரிவித்தனர்.

ஏழாலையில் உள்ள ஏழு ஆலையங்கள் அமைந்துள்ள இடத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்த நான்கு கலசங்களும் முருகன் ஆலயத்தில் உள்ள ஐந்து கலசங்களும் ஏழாலை வடக்கில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள நான்கு கலசங்களும் மற்றும் கட்டுவன் வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இரண்டு கலசங்களும் திருடப்பட்டுள்ளன.

சுன்னாகம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுகளில் இந்த ஆலயங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .