2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மகிழவெட்டுவானில் இளம் தாயின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 03 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன், -க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான் கல்குடா கிராமத்தில் இளம் தாயொருவரின்  சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கல்குடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான விஜயகுமார் தீபா (வயது 20) என்பவரின் சடலத்தையே பொலிஸார் நேற்று வியாழக்கிழமை இரவு மீட்டுள்ளனர்.

வீடொன்றினுள்; சடலமொன்று காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்தே அவ்வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் கட்டார் நாட்டில் கடந்த 2 வருடங்களாக தொழில் செய்பவரென  உறவினர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத்பண்டார விஜேசுந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X