2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கைக்குண்டை வழங்கியவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 03 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

கைக்குண்டு ஒன்றை பிறிதொரு நபருக்கு வழங்கியதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

கைக்குண்டொன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளி பகுதியில் கடந்த 27ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கைக்குண்டுடன் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட இந்நபருக்கு கைக்குண்டை வழங்கியதாகக் கூறப்படும் ஒருவரையே நேற்று வியாழக்கிழமை  கைதுசெய்துள்ளதாக  வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித்த ஜயரெட்ன தெரிவித்தார்.

இச்சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 8ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X