2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

36 வயதுடைய பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 ஜூன் 26 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)
யாழ்.புகையிரத நிலையத்திற்குள் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராச உத்தரவிட்டார்.

புகையிரத நிலையத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 36 வயதான பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண்ணினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது

முறைப்பாட்டைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்று திங்கட்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் குறித்த பெண்ணை யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .