2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

6 வயது மகளுக்கு நஞ்சூட்டிய தாய் கைது

Kogilavani   / 2012 ஜூலை 06 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்தினபுரி, சூரியகந்தைக்குட்பட்ட எட்போர்ன் தோட்டத்தில் 6 வயது சிறுமியொருத்தி தனது தாயாரினால் பலவந்தமாக நஞ்சூட்டப்பட்டு ஆபத்தான நிலையில் ரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளாள்.

குடும்ப உறவுகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராரே இதற்கு காரணமென பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களான மேற்படி சிறுமியின் தாயும் தந்தையும் நேற்று முன்தினம் புதன்கிழமை தமது வீட்டில் சண்டையிட்டதாகவும் அதன்பின் சிறுமியின் தாய் பலவந்தமாக நஞ்சை அருந்தக் கொடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சிறுமி ஆபத்தான நிலையில் தந்தை மற்றும் அயலவர்களின் உதவியுடன் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பொலிஸார் சிறுமியின் தாயை கைது செய்துள்ளடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(அஜித்லால் சாந்தஉதய)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .