Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 13 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
ஆனமடுவ -ஆன்டிகம புனவிட்டிய பிரதேசத்தில் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 66 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (12) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, சனிக்கிழமை (12) அதிகாலை 2.50 மணியளவில் ஆனமடுவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஆனமடுவ பொலிஸார் மற்றும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் சடலத்தை மீட்டதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தின் வாய், கை மற்றும் கால்கள் துணியினாலும், கழுத்து கம்பி ஒன்றினாலும் இறுக்கி கட்டப்பட்டுள்ள நிலையிலும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்றதாக ௯றப்படும் வெள்ளிக்கிழமையன்று (11) மாலை 5 மணியளவில், உயிரிழந்த பெண்ணின் 40 வயதுடைய மகன் மருத்துவ தேவை நிமித்தம் குருநாகல் பகுதிக்குச் சென்றுள்ளாரெனவும், அன்றைய தினம் கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணும் அவரது கணவரும் மாத்திரம் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (11) இரவு குறித்த இருவரும் தூங்கிய பின்னர் வீட்டின் முன் பக்கமாக கதவை உடைப்பதைப் போன்ற சத்தம் ஒன்று கேட்டதாகவும், அந்த சத்தத்தை அடுத்து உயிரிழந்த பெண் டோச் லைட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மனைவி, மிக நீண்ட நேரமாகியும் மீண்டும் வீட்டுக்குள் வராததை அவதானித்த கணவர் வீட்டின் முன் பக்க கதவு வழியாக வெளியே செல்ல முயற்சி செய்த போது அந்த கதவு மூடப்பட்டிருந்ததை அடுத்து அவர் பின் பக்கமாக சென்று கதவைத் திறந்து வெளியே பார்த்துள்ளார் எனக் ௯றப்படுகிறது.
இதன்போது, தனது மனைவி எடுத்து சென்றதாக ௯றப்படும் டோச் லைட் வீட்டின் பின் பக்கம் நிலத்தில் கிடந்ததாகவும் தனது மனைவியின் வாய், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார் என உயிரிழந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகவும், கொள்ளையடிக்கும் நோக்கில் வருகை தந்த நபர்களே குறித்த பெண்ணை இவ்வாறு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சோடி சப்பாத்து மற்றும் ஒரு சோடி கையுறைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆனமடுவ பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எச்.எம்.உபாலி அபேரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நீதிவான் விசாரணைகளின் பின்னர், புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்ன மலலவின் வழிகாட்டலின் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
15 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago