2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

9 கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் கைது

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     (மொஹொமட் ஆஸிக்)
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூஜாபிட்டிய நகரில் 9 கடைகளை உடைத்து சுமார் 12 இலட்சம் ரூபாய்  பெருமதியுள்ள பொருட்களை திருடியதாக கூறப்படும் சந்தே நபர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

பொலான்னறுவை அரலகன்வில பிரதேசத்தை சேர்ந்த இச்சந்தேக நபர் பொருட்களை திருடி பல பிரதேசங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணினிகள், கையடக்க தொலைபேசிகள், வாகன உதிரிப்பாகங்கள், உணவுப் பொருட்கள் உற்பட பல பொருட்களை இவர் திருடியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கண்டி நீதிமனறில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .