Kanagaraj / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டை வீதியில், பழைய கோட்டை வீதியில், ஆயுர்வேத மத்தியநிலையத்தில் விபசாரம் செய்ததாக கூறப்படும், பெண்கள் நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
புதன்கிழமை(17) மாலை 4.20க்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மத்திய நிலையத்தின் முகாமையாளரான பெண் மற்றும் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ராஜகிரிய, கெக்கிராவ மற்;றும் பிபில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் அனைவரும் 22 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், அவ்வனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தனர்.
22 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
2 hours ago