Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 13 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
முரசுமோட்டை ஐயன்கோவில் ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
நபரொருவர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியதை கண்ட பிரதேச மக்கள், நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால் தேடியுள்ளனர்.
அவரது கைத்தொலைபேசி , பாதணி மற்றும் சேர்ட் என்பன ஆற்றின் கரையில் இருப்பதனை கண்டு, ஆற்றில் இறங்கி தேடியபோது, அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முரசுமோட்டை சேற்றுக் கண்டியை சேர்ந்த 33 வயதான மகாலிங்கம் சுமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்
சடலத்தை மீட்டு கரையில் வைத்த பொதுமக்கள், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.
இரண்டு மணித்தியாலங்கள் கடந்த நிலையிலும் கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதேவேளை, குறித்த நபரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago