Gavitha / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, செட்டிக்குளம் அடம்பன்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (எஸ்.டி.எப்) கட்டளையிடும் அதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வவுனியா நீதிமன்ற நீதவான் விநாயகமூர்த்தி ராமகமலன், வவுனியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஆகியோரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணியை பலவந்தமாக பிடித்து வைத்துள்ள விசேட அதிரடிப்படையினர், அந்த முகாமிலிருந்து வெளியே தொடுத்த மின்கம்பியை இணைந்துள்ளனர். இந்த மின்கம்பியில் சிக்குண்டு பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டோருக்கு உத்தரவிடுமாறே அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
16 minute ago
24 minute ago
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
29 minute ago
45 minute ago