Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முஹம்மது முஸப்பிர்
நாத்தாண்டி தப்போவ கொஸ்ஹேன பிரதேசத்தில் கைத்துப்பாக்கி, ரவைகள் 10, தோட்டக்களின் கூடுகள் 02 மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை கைதுசெய்துள்ளதாக மாராவிலப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுள் 10 அடி நீளம் கொண்ட டெடனேட்டர் நூலும், 130 கிராம் வெடி மருந்தும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் பக்கத்து வீட்டிற்குச் சென்று அங்கு அசுத்தம் ஏற்படுத்துவதாகக் கூறி கடந்த 7ஆம் திகதி கோழி உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு செய்த போது அந்நபர் அவ்வாறு முறைப்பாடு செய்தவரைத் தாக்கியுள்ளதாகவும், அன்றைய தினம் மாலை தாக்குதலுக்கு உள்ளானவர் கைத்துப்பாக்கியுடன் நாத்தாண்டி கொஸ்ஹேன பிரதேசத்தில் அமைந்துள்ள கோழி உரிமையாளரின் வீட்டிற்குச் சென்று அவரை வெளியில் அழைத்து அச்சுறுத்தும் நோக்கில் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக மாராவிலப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சந்தேகநபர் வீட்டில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற அவரைக் கைதுசெய்துள்ளனர்.
பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, ரவைகள், தோட்டாக்கூடுகள் மற்றும் வெடிபொருட்களை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து அவரின் நண்பர்கள் மூவரும் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மாராவிலப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.டி.ஆர். பிரியந்தவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
9 minute ago
17 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
15 Nov 2025
15 Nov 2025