Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 17 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சிறுப்பிட்டி மத்தி ஜே-271 கிராம சேவையாளர் பிரிவில், தனிமையில் வசித்து வந்த ஆசிரியை, நேற்று இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி தெரிவித்தனர்.
அதே இடத்தை சேர்ந்த சுப்பிரமணியம் சரஸ்வதிதேவி (வயது 68) என்ற ஒய்வு பெற்ற ஆசிரியையே இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்யாத மேற்படி ஆசிரியை, தனிமையில் வசித்து வந்திருந்ததாகவும் இவரது உறவினர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் சமையல் அறை கூரையின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய நபர்கள், இச் கொலையினை புரிந்துள்ளனர். இக் கொலையானது நகை, பணம் திருடும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளே வந்த இனந்தெரியாத நபர்களுக்கும் ஆசிரியைக்கும், இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பொருட்களும் வீடு முழுவதும் வீசிக்காணப்பட்டுள்ளது.
இதன் போது இனந்தெரியாத நபர்கள் ஆசிரியையை கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என, பொலிஸார் கூறினர்.
இன்று காலை தோட்டத்தில் வேலை செய்வதற்கு சென்ற கூலித்தொழிலாளி, ஆசிரியையின் நடமாட்டம் காணாததை அடுத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
இதன் போது ஆசிரியை கொலை செய்யப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. ஸ்தலத்துக்கு வந்த குற்றத்தடுப்பு பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago