Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
ஓய்வு விடுதி என்ற போர்வையில் இயக்கப்பட்டு வந்த விபசார விடுதியை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலிஸார், அங்கிருந்த மூன்று பெண்களையும் ஆணொருவரையும் கைது செய்துள்ளனர்.
சீதுவை பகுதியில் இயங்கிய இந்த விபசார விடுதியை, நேற்று திங்கட்கிழமை (09) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இவர்கள் இரத்தினபுரி, கொங்கதெனியாவ, பொல்பிட்டிகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிவதாக வீட்டாருக்குத் தெரிவித்து விட்டு, இவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததாக, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சீதுவை பகுதியில், இவ்வாறு விபசார விடுதியொன்று இயங்கி வருவதாக பிரதேச மக்கள் மற்றும் மதகுருமார்களால் வழங்கப்பட்ட தகவல்களையடுத்தே, இந்த விபசார விடுதி முற்றுகையிடப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago