2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உலக அழகிப் போட்டியில் இலங்கைக்கு 3ஆம் இடம்

Freelancer   / 2023 மார்ச் 06 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்திலுள்ள ஷார்ம் எல் ஷெய்க் இல் சன்ரைஸ் வைட் ஹில் ரெசோட் ல் நடைபெற்ற Top Model Of The World நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த மொடல் அழகி சந்தானி பீரிஸ் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மெக்சிக்கோவின் மரியானா மசியாஸ் முதலிடத்தையும் கொலம்பிய நாட்டைச் சேர்ந்த லெய்சி ரிவாஸ் 2ஆம் இடத்தையும் வென்றனர்.

WBO அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு இரண்டு வாரங்கள் நடைபெற்றதுடன் பங்கேற்ற 43 பேரில் இறுதிச் சுற்றுக்கு அறுவர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டமையும்  அதில் இலங்கையைின் சந்தானி பீரிஸ் 3ஆம் இடத்தை வென்றுள்ளதும் குறிப்பித்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X