2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பட்டமளிப்பு விழா

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 13 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


சன்சில்க் ரமணி பெர்னான்டோ அக்கடமியின் பட்டதாரி மாணவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 1920களின் கண்கவர் சிகையலங்காரங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்திருந்தது. 9 ஆவது பட்டமளிப்பு வைபவத்தின் போது, கல்வியகத்தின் கண்டி மற்றும் கொழும்பு கிளைகளை சேர்ந்த சுமார் 100 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், 18 மாணவர்களுக்கு சன்சில்க் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. 
 
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்பு பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சித்தார்த் பெனர்ஜி பங்குபற்றியதுடன், கௌரவ விருந்தினராக கௌரவ ரோஸி சேனாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.
 
Great Gatsby தொனிப்பொருளின் கீழ் நடைறெ;ற இந் நிகழ்வில் சன்சில்க் ரமணி பெர்னான்டோ பயிற்சி கல்வியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லகி லெனகல அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து, நொஹாரி சமரசிங்க மற்றும் அவரது பங்காளரான சரித் டி சில்வா ஆகியோர் லத்தீன் அமெரிக்க பாணியில் அமைந்த நடனத்தை வழங்கியிருந்தனர். இவ் வர்ணமயமான நிகழ்வில் பட்டதாரி மாணவர்கள் Gatsby பாணியிலமைந்த வடிவமைப்புக்களை காட்சிப்படுத்தியதுடன், தற்போது அக்கடமியில் பணியாற்றும் நஷாலி பெர்னான்டோ அவர்கள் தனியாக தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இந் நிகழ்ச்சியை வர்ணமயமாக்கும் வகையில், கான்தி ரன்ச்சாகொடவின் மாணவர்களின் நடன நிகழ்வினை தொடர்ந்து, அஸ்லம் ஹுசைனின் விசேட பேஷன் ஷோ நிகழ்வு இடம்பெற்றது. 
 
கற்கைநெறியின் போது சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்திய உஷானி கல்பனி நயன்தாராவை சன்சில்க் சிறந்த மாணவியாக அடையாளப்படுத்தி, சன்சில்க் மூலம் அவர் தனியாக ஒரு சலூனை ஆரம்பிப்பதற்கான 50,000 ரூபா பெறுமதியான சலூன் தயாரிப்புக்கள் அவருக்கு வெகுமதியாக வழங்கப்பட்டன.
 
இந்த பட்டமளிப்பு நிகழ்வில் ரமணி பெர்னான்டோ சலூனின் முகாமைத்துவ பணிப்பாளர் ரமணி பெர்னான்டோ கருத்து வெளியிடுகையில், 'தொடர்ந்து 9 ஆவது ஆண்டாக நாம் எமது கல்வியகத்தின் பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்வதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சிகை மற்றும் அழகு துறையில் இணைந்து கொள்வதற்கான கேள்வி அதிகரித்த வண்ணமுள்ளதுடன், எமது கல்வியகத்துடன் அதிக மாணவர்கள் இணைந்து கொள்வதுடன், 2013 ஆம் ஆண்டில் நடைபெறும் இரண்டாவது பட்டமளிப்பு விழாவாக இது அமைந்துள்ளது. கற்கையின் போது முயற்சியுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட பட்டதாரி மாணவர்களுக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என தெரிவித்தார்.
 
'2005 ஆம் ஆண்டு முதல் எமது பெருமைக்குரிய பங்காளரான சன்சில்க் வர்த்தகநாமமானது, இலங்கையின் சிகை மற்றும் அழகுகலை துறையின் தரத்;தினை உயர்த்தி, அத்துறை தொடர்பான புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்த களத்தை அமைத்து கொடுப்பதற்கான உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது. சன்சில்க் - ரமணி பெர்னான்டோ ஹெயார் அன்ட் பியுட்டி அக்கடமி இலங்கையிலுள்ள பழமையானதும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார கற்கைகளை வழங்கும் கல்வியகமாகும். இக் கல்வியகத்தின் மூலம் சிற்றி அன்ட் கில்ட்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சிகை பராமரிப்பு மற்றும் அழகுக் கலையில் டிப்ளோமா, உயர்தர கற்கைகள் மற்றும் சிறப்பு தேர்ச்சி பெறக்கூடிய கற்கைகள் போன்றன வழங்கப்படுகின்றன. இக் கல்வியகத்துடன் ஆண்டுதோறும் 250 மாணவர்கள் இணைந்து கொள்கின்றனர்' என யுனிலீவர் ஸ்ரீலங்கா, லகி லெனகல, கல்வியகத்தின் குழு, விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தமது நன்றியை தெரிவித்த ரமணி பெர்னான்டோ தெரிவித்தார்.
 
யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்பு பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சித்தார்த் பெனர்ஜி கருத்து தெரிவிக்கையில், 'சன்சில்க் - ரமணி பெர்னான்டோ கல்வியகத்தின் கைகோர்ப்பின் மூலம் சிகை மற்றும் அழகுகலை துறையில் ஆர்வமுள்ளவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். சன்சில்க் என்பது கூந்தலினால் இளம் பெண்களுக்கு சந்தோஷத்தை வழங்கும் வர்த்தகநாமமாகும். அழகு மற்றும் ஆரோக்கியமான கூந்தல் குறித்து இளம் பெண்களுக்கு வழிகாட்டல்களையும், உதவிகளையும் வழங்கக்கூடிய நிபுணர்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். இதை கருத்தில் கொண்டு சன்சில்க் மூலம் வருடாந்தம் 25 புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதுடன், இதுவரையில் 163 இற்கும் அதிகமான புலமைப்பரிசில்களை வழங்கப்பட்டுள்ளது. இந்த கைகோர்ப்பின் மூலம் இலங்கையின் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இத்துறை மீதான அவர்களின் கனவினை நனவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குவதுடன், அவர்களினால் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் சாதகமான பங்களிப்பினை வழங்க வழிவகுத்துள்ளது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .