Gavitha / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகவும் அழகான பெண்மணி - 2015ஆக ஹொலிவூட் கவர்ச்சி நடிகை சான்ட்ரா புல்லக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல 'பீப்புல்' பத்திரிகையே இவரை தெரிவு செய்துள்ளது.
குறித்த பத்திரிகையில், 2015ஆம் ஆண்டுக்கான அழகான பெண்மணியாக சான்ட்ரா புல்லக் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
சான்ட்ரா புல்லக்குக்கு தற்போது 50 வயதாகின்றது. 1987ஆம் ஆண்டில் சினிமாவில் நடக்க தொடங்கிய இவர் 'ஸ்பீட்' உள்ளிட்ட சுமார் 50 ஹொலிவூட் படங்களிலும் சில ஆங்கில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 1990-2000 ஆண்டுகளுக்கிடையில் புகழின் உச்சத்தில் இருந்த இவருக்கு, ஏராளனான ஆண் ரசிகர்கள் பட்டாளம் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago