2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

‘Hello Hall Of Fame – 2013’ விருது விழாவில் பொலிவூட் பிரபலங்கள்...

Menaka Mookandi   / 2013 நவம்பர் 25 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


மும்பை, பல்லாடியம் ஹோட்டலில் நடைபெற்ற 'ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் 2013' விருது விழாவில் பல்வேறு பிரபலங்கள் மிகவும் கலக்கலாக வந்திருந்தனர். அதிலும் இந்த சிவப்பு கம்பளத்தில் பலர் சிவப்பு நிற ஆடைகளைத் தான் அணிந்து வந்திருந்தனர். இதில் நடிகைகள் மட்டுமின்றி, பல்வேறு நடிகர்களும் மிகவும் அருமையாக சிவப்பைப் போன்றே ஹை லுக்கை கொடுக்கும் கருப்பு நிற உடைகளில் வந்திருந்தனர்.

அதில் நடிகர்களில் ஷாருக்கான், ரன்வீர் சிங் மற்றும் இம்ரான் கான் மிகவும் அழகான டாக்ஷிடோ சூட்டில் வந்திருந்தனர். நடிகைகள் சிவப்பு நிற உடைகளில் செக்ஸியாக வந்திருந்தனர். அதில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, இலியானா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதுமட்டுமின்றி நடிகை ரேகா எப்போதும் போல, அழகான பட்டுப் புடவையில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X