2025 மே 16, வெள்ளிக்கிழமை

அறக்கை கிடைத்ததும் நிச்சயம் விளக்குவேன்: பிரதமர்

Thipaan   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ் 

‘மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) பிரதான நிறைவேற்று அதிகாரியான (சீ.ஈ.ஓ) டொக்டர் சமீர சேனாரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸ் அறிக்கை கிடைத்ததும், நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கப்படும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க, மேற்படி சம்பவம் தொடர்பில் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

முன்னதாக கேள்வியெழுப்பிய அநுரகுமார திசாநாயக்க எம்.பி. “சைட்டம் தொடர்பில் ஆதரவான கருத்துக்கள் நிலவினாலும், பெருவாரியான எதிர்ப்பு குரல்களும் நிலவுகின்றன. இந்த சம்பவமானது பல்வேறு அர்த்தப்படுத்தல்களுக்கு வழிவகுக்கும். எதிரான தரப்பில் உள்ளவர்களே இதை செய்திருப்பார்கள் என்று சில அமைச்சர்கள் இப்போதே கருத்து வெளியிட ஆரம்பித்துவிட்டனர் ” என்றார். 

இதற்கு பதிலளித்த பிரதமர், 

“இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை நடக்கிறது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதைத் தவிர வேறு எதுவும் இது தொடர்பில் எமக்குத் தெரியாது. பொலிஸ் அறிக்கை கிடைத்ததும் இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை சபைக்கு அறியத் தருகின்றோம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .