Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Nirshan Ramanujam / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தனக்குக் காதல் கடிதம் அனுப்பியிருப்பாராயின் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றில் இன்று (11) தெரிவித்தார்.
புதிய அரசமைப்பு தொடர்பிலான விஜயதாஸ ராஜபக்ஷவின் கடிதம், சபாநாயகருக்கான காதல் கடிதம் போன்றது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தமைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வியொன்றை முன்வைத்தார்.
‘புதிய அரசமைப்புக்கான அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை தடை செய்யக் கோரியும் புதிய அரசமைப்பானது சட்டத்துக்கு முரணானது எனவும் குறிப்பிட்டு முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அது தொடர்பில் நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்னவென விளக்கமளிக்குமாறு அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “நான் அதற்கு உடன்படவில்லை என பதில் அனுப்பியிருக்கிறேன். எனினும் ஊடகங்களுக்கு நான் அதனைத் தெரிவிக்கவில்லை” என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, விஜேதாச ராஜபக்ஷ தான் இந்த அரசமைப்பை உருவாக்குவதற்கு முன்னின்றார். அவருக்கு அவரது கருத்தை முன்வைப்பதாயின் நாடாளுமன்றத்துக்கு வந்து தெரிவிக்க வேண்டும். அவ்வாறு நாடாளுமன்றத்துக்கு வந்து பேசுவாராயின் அதற்கு சபாநாயகரால் பதிலளிக்க முடியும் . அதைவிடுத்து சபாநாயகருக்குக் கடிதம் எழுதிப் பயனில்லை. அவர் சபாநாயகருக்கு காதல் கடிதம் எழுதுகிறார் என்றார்.
இதன்போது சபையில் சிரிப்பொலி எழுந்ததுடன், ‘‘அவர் காதல் கடிதம் எழுதியிருப்பாராயின் நான் ஏற்றுக்கொள்ளப்போதில்லை” என சபாநாயகர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
47 minute ago
55 minute ago