Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2017 ஜனவரி 26 , மு.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகல உறுப்பினர்களினதும் இணக்கம் இருப்பின், கோப் அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க முடியும் என்று சபாநாயகர், சபைக்கு நேற்று அறிவித்தார்.
நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில், நேற்றுப் பிற்பகல் கூடியது, சபாநாயகரின் அறிவித்தல்களுக்கான நேரத்தின் போதே, சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். “இலங்கை மத்திய வங்கியின் சர்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த அரச பொறுப்புமுயற்சிகள் குழுவின் (கோப்) அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது தொடர்பில், எம்.பி.க்கள் என்னிடம் வினவியிருந்தனர்.
“எனது அபிப்பிராயத்தைப் பொறுத்த வரையில், இது தொடர்பில் தீர்மானம், இந்த சபையினாலேயே எடுக்கப்பட வேண்டும் என்பதை சகல எம்.பி.களுக்கும் தெரிவித்துக் கொள்வதுடன், உங்கள் (எம்.பி.க்கள்) அனைவரினதும் இணக்கம் இருப்பின், இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்க முடியும்.
“கோப் குழுவினால் இந்த நாடாளுமன்றத்துக்கு, காலத்துக்கு காலம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் இதற்கு முன்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் எதுவும் அறியக் கிடைத்திருக்காத போதிலும், அவ்வாறு செய்வது ஆக்கபூர்வமான முன்னுதாரணமாக இருக்கும் என்பது நிச்சயம்.
“எதிர்வரும் காலங்களிலும் நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுக்களினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னர், இந்தச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும் அவ்வாறான அறிக்கைகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பது மிகவும் ஆக்கபூர்வமானதும் காலத்துக்கு உகந்ததுமான நடவடிக்கையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று சபாநாயகர், இதன்போது தெரிவித்தார்.
சுபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா, எம்.பிக்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துநெத்தி, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago