2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

‘தெரிவுக்குழு அமைக்கவும்’

George   / 2017 மே 25 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் மற்றும் அவை அழிக்கப்படுகின்றமை தொடர்பில் முரண்பாடான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகின்றன. ஆகையால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தெரிவுக்குழுவை அமைக்கவேண்டும்” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று, நிலையியல் கட்டளையின் கீழ், எம்.பிக்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் எழுப்பியிருந்த கேள்விகளுக்குப் பின்னர் கருத்துரைக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு ​கோரிநின்றார்.

 எனினும், இந்தக் கோரிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .