Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2017 ஜூன் 08 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
“பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி துறைமுகம் தொடர்பில், அங்குள்ள கிராமங்களுக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் பணிகள் ஆரம்பிக்கப்படும்” என, மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா, நாடாளுமன்றில் வைத்து நேற்று விடுத்த அழைப்பை ஏற்று அவர் இதனைக கூறினார்.
முன்னதாக, 23/2 கீழ் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, “பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி துறைமுகத்துக்கான இடங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“அங்குள்ள நடராஜர் கலையரங்கு வரை மாத்திரமே நிலங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என, முன்னர் தெரிவித்த மீன்பிடி வளத்துறை அமைச்சின் அதிகாரிகள் முழுமையான வரைபடத்தை மறைத்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.
“தற்போது, கலையரங்கையும் தாண்டியதாக இந்த நிலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக வரைப்படத்தை அதிகாரிகள் காட்டியுள்ளனர். இதனால், கொட்டடி கிராமம் முழுமையாக அழிவடையும் நிலை காணப்படுகின்றது.
“இங்கு 265 குடும்பங்கள் வசிப்பதுடன், முனை பகுதியில் 150 குடும்ங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் மீன்பிடியை தமது குடும்ப தொழிலாக கொண்டுள்ளதுடன், தமது இருப்பிடங்களுக்கு அருகில் தமது படகுகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.
“இந்நிலையில், இந்த அபிவிருத்தி நடவடிக்கை காரணமாக இந்த மக்களின் வாழ்வாதாரம் முடுழுமையாக பாதிப்படையும். அவர்களுக்கான மாற்று வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
“அத்துடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, மீன்பிடி அமைச்சர், குறித்த பகுதிக்கு வந்து மக்களுடன் கலந்துரையாட வேண்டும்” என்றார். அதனை மீன்பிடி அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago