2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வேலைநிறுத்த நாளில் ரஞ்சனுக்கு சிகிச்சை செய்ய முற்பதிவு

George   / 2017 மே 05 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

"வைத்தியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக கூறி ஏழை மக்களை துன்பத்துக்குள்ளாகிவிட்டு, பணம் வாங்கிக்கொண்டு தனியார் வைத்தியசாலைகளில் முன்பதிவு வழங்கி வைத்தியம் பார்க்கின்றனர்" என, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேககர குற்றஞ்சாட்டினார்.

"அத்துடன், கொழும்பிலுள்ள பிரபல வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர், மாலை நேரத்தில் சிகிச்சை வழங்குவதற்கு முன்பதிவுகளை வழங்கியுள்ளார்" என்றார்.

(அதன்போது, முன்பதிவு செய்வதற்கு பணம் வழங்கிய பற்றுச்சீட்டு மற்றும முன்பதிவு ஆவணத்தையும் சபையில் காட்டினார்)

அவர் தொடர்ந்து கூறுகையில், "நாடு முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடமைக்கு செல்லாத இவர்கள், தமது தனிப்பட்ட சிகிச்சை நிலையங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பெருமளவு கட்டணம் அறவிட்டு சிகிச்சை வழங்குகின்றனர்.

"சாதாரண பொது மக்களை துன்பத்துக்கள்ளாக்கிவிட்டு தனிப்பட்ட சிகிச்சை மூலம் பணம் சம்பாதிக்கின்றனர்"என்றார்.

"மேலும், இவ்வாறு முன்பதிவு செய்தவர் வேறு யாருமல்ல, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கே இன்று மாலை சிகிச்சை செய்வதற்கு பிரபல வைத்தியசாலையின் வைத்தியர் முன்பதிவு வழங்கியுள்ளார்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .