2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

‘உணவுப் பற்றாக்குறை சவாலுக்கு முகங்கொடுக்க தயாராவோம்’

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வளர்ச்சியடைந்துவருகின்ற மக்களது தேவைகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தி தொடர்பில் மிக அதிக அக்கறை செலுத்தவேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“அண்மைக்காலமாக எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்கள் காரணமாக சுமார் 9 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர்.  

“அதிகரித்த சனத்தொகைக்கேற்ப உணவு உற்பத்திகளை மேற்கொள்ளல் என்பது, குறுகிய நிலப்பரப்புகளில் அதிகளவு உணவு உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  

“இதனால், பல்வேறு இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எமது இயற்கை, மண் வளம் மற்றும் நீர் வளமம் பெரிதும் பாதிக்கப்பட்டு, மக்கள் பாரிய பல நோய்களுக்கு உள்ளாகக் கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.  

“எனவே, இவற்றை நிவர்த்தி செய்ய சரியான நீண்ட காலத் திட்டங்கள் அவசியம் என்பதுடன், நாடளாவிய ரீதியில் அடிக்கடி உணவகங்களில் சோதனைகளை மேற்கொண்டு, மக்களுக்குத் தரமானதும் சுத்தமானதும், நியாய விலைகளைக் கொண்டதுமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .