Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2017 மே 05 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்" என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்றில் இன்று குற்றஞ்சாட்டினார்.
ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க விளக்கமளித்ததன் பின்னர் விமல் இதனைக் கூறினார்.
"சுமந்திரன் எம்.பி.க்கு புலிகளின் புதிய குழுவொன்றினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறி அவருக்கு பாதுகாப்பை அதிகமாக வழங்கியுள்ளீர்கள்.
புலிகளை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சுமந்திரனை விடவும் பல மடங்கு அச்சுறுத்தல் இருக்கும்.
மே தினக் கூட்டத்தை பார்த்து மஹிந்த மீதான தாக்குதலாக இந்த பாதுகாப்பு குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சாகல, "இந்த விடயம் தொடர்பில் தெளிவான பதிலை அளித்து விட்டேன். அதை புரிந்துகொள்ளும் ஆற்றல் விமலுக்கு இல்லையென்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago