Thipaan / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாகத் தலையிடமுடியாது என்றும் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, சமிந்த விஜேசிறி ஊவா மாகாண சபை தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.
ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சரினால் ஊவா மாகாண பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப் பைகள் வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறெனின் இதனூடாக அனுகூலம் கிடைக்கப்பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கேட்டிருந்தார்.
கேள்விகளுக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளித்துகொண்டிருந்தார். எனினும், பதிலில் திருப்திகொள்ளாத சமிந்த விஜேசிறி, பாடசாலை புத்தகப் பைகள் விவகாரத்தில் பாரிய முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளன. ஆகையால், மாகாண சபையில் வினவி, பதிலளிக்குமாறு அமைச்சரிடம் கோரிநின்றார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்களால், நேரடியாக தலையிடமுடியாது. பிரதான செயலாளர் வழங்குகின்ற தரவுகளின் அடிப்படையிலேயே பதிலை வழங்கமுடியும் என்றார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago